மக்களவை மற்றும் சட்டப்பேரவை இடைத்தேர்தல் முடிவுகள் நாளை மறுநாள் வெளியீடு

மக்களவை மற்றும் சட்டப்பேரவை இடைத்தேர்தலில் பதிவான வாக்குகள் நாளை மறுநாள் எண்ணப்படுகின்றன

17 வது மக்களவை தேர்தல் 7 கட்டங்களாக ஏப்ரல் 11 முதல் மே19 வரை நடைபெற்றது. மொத்தமுள்ள 543 தொகுதிகளில் 542 தொகுதிகளுக்கு தேர்தல் நடைபெற்றது. தமிழகத்தில் உள்ள வேலூர் தொகுதி இடைத்தேர்தல் தேர்தல் ஆணையத்தால் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. இந்த தேர்தலுடன் ஆந்திரா,அருணாச்சலபிரதேசம்,ஒடிசா,சிக்கிம் ஆகிய மாநிலங்களுக்கு சட்டப்பேரவைதேர்தலும் நடைபெற்றது. தமிழகத்தில் 22 தொகுதிகளுக்கு 2 கட்டமாக சட்டப்பேரவை தேர்தல் நடைபெற்றது. வாக்குப்பதிவு கடந்த 19 ம் தேதியுடன் முடிவடைந்த நிலையில் நாளை மறுநாள் வாக்குகள் எண்ணப்படுகின்றன. காலை 8.30 க்கு வாக்குகள் எண்ணிக்கை தொடங்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது. வாக்கு எண்ணிக்கை தொடங்கிய ஒரு மணி நேரத்தில் முதல் சுற்று வாக்கு எண்ணிக்கை வெளியாக உள்ளது. உச்ச நீதிமன்ற உத்தரவுப்படி ஒவ்வொரு தொகுதியிலும் 5 விவிபேட் இயந்திர வாக்குப்பதிவு சரிபார்க்கப்பட உள்ளது

Exit mobile version