பழமை வாய்ந்த இரண்டு குளங்களை தூர்வாரி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மாவட்ட நிர்வாகத்திடம் பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்
திருவண்ணாமலை மாவட்டம் கீழ்பென்னத்தூர் அடுத்துள்ள மங்கலம் பகுதியில் பழமையான இரண்டு குளங்கள் உள்ளன. இப்பகுதி மக்கள் இந்த குளங்களில் உள்ள தண்ணீரை முன்பு பயன்படுத்தி வந்துள்ளனர். இந்த நிலையில், தற்போது குளங்கள் வறண்டு செடி, கொடிகள் வளர்ந்துள்ளதால் கால்வாய்கள் அடைக்கப்பட்டு தண்ணீர் செல்ல முடியாத நிலை உள்ளது. குளங்களை தூர்வாரினால், இந்த பகுதியில் தண்ணீர் தட்டுப்பாடு நீங்கும். எனவே மாவட்ட நிர்வாகம் குளங்களை தூர்வார நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.