ரூ.1, ரூ.2, ரூ.5, ரூ.10, ரூ.20 காசுக்களை வெளியிட ரிசர்வ் வங்கி முடிவு

புதிய 20 ரூபாய் காசுகளை அறிமுகம் செய்ய ரிசர்வ் வங்கி முடிவு செய்துள்ளது.

கடந்த 2016ஆம் ஆண்டு முதல் புதிய ரூபாய் நோட்டுக்களை ரிசர்வ் வங்கி புழக்கத்திற்கு கொண்டு வந்துள்ளது. அதன் ஒருபகுதியாக புதிய ஒரு ரூபாய், 2 ரூபாய், 5 ரூபாய், 10 ரூபாய் மற்றும் 20 ரூபாய் காசுகளை அறிமுகப்படுத்த ரிசர்வ் வங்கி முடிவு செய்துள்ளது. இதற்கான வடிவமைப்புகளை இறுதி செய்வதற்கான ஆலோசனை கூட்டம் வரும் 16ஆம் தேதி டெல்லியில் நடைபெற இருப்பதாக ரிசர்வ் வங்கி அறிவித்துள்ளது. இந்த புதிய காசுகள் பார்வை குறைப்பாடு உள்ளவர்கள் பயன்படுத்த மிகவும் எளிதாக இருக்கும் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

Exit mobile version