இந்தியப் பொருளாதாரத்துக்கு மிகப்பெரிய உந்துதல் தேவைப்படுவதாக ரிசர்வ் வங்கி ஆளுநர் சக்திகாந்த தாஸ் தெரிவித்துள்ளார்.
இந்திய ரிசர்வ் வங்கி தொடர்ந்து நான்காவது முறையாக வட்டி விகிதத்தைக் குறைத்துள்ளது. இருப்பினும் பொருளாதார வளர்ச்சி விகிதம் ஐந்தாண்டுகளில் இல்லாத வகையில் குறைந்துள்ளது. இந்நிலையில் நாட்டின் பணக்கொள்கை குறித்த குழுவின் கூட்டம் மும்பையில் நடைபெற்றது. அந்தக் கூட்டத்துக்குப் பின் பேசிய ரிசர்வ் வங்கி ஆளுநர் சக்திகாந்த தாஸ், பணவீக்கச் சுழற்சி, பொருளாதார வளர்ச்சி வீதம் ஆகியவற்றைச் சீராக்க வழக்கமான அணுகுமுறை போதாது எனத் தெரிவித்தார். நாட்டின் பொருளாதாரத்தைத் தூக்கி நிறுத்த ஒரு மிகப்பெரிய உந்துதல் தேவைப்படுவதாகவும் தெரிவித்தார்.