காஷ்மீரில் கடந்த வாரம் நடந்த தீவிரவாத தாக்குதலில் 44 சிஆர்பி.எஃப் வீரர்கள் வீரமரணம் அடைந்தனர். இந்நிலையில் காஷ்மீரில் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. இதை தொடர்ந்து, காஷ்மீரில் இருக்கும் தாய்மார்களுக்கு ராணுவ தலைமை அதிகாரி கன்வால் ஜீத் சிங் கோரிக்கை ஒன்றை விடுத்துள்ளார். தங்களின் பிள்ளைகள் கையில் துப்பாக்கி ஏந்தினால், அவர்களை ராணுவத்தில் சரண்யடைய செய்யுங்கள் என்று அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.
பிள்ளைகள் தீவிரவாதத்தில் இணைவதை நீங்கள் தான் தடுத்து நிறுத்த முடியும் என்று அவர் விளக்கம் அளித்துள்ளார். தங்களின் பிள்ளைகளை தீவிரவாதத்தில் இணைவதை தடுக்க தவறினால் கடுமையான பின்விளைவுகளை சந்திக்க நேரிடும் என்றும் அவர் எச்சரித்தார்.