சர்ச்சைக்குரிய நிலத்தை தவிர மற்ற இடத்தை விடுவிக்க கோரிக்கை

அயோத்தியில் சர்ச்சைக்குரிய நிலத்தை தவிர மற்ற இடத்தை வழக்கில் இருந்து விடுவிக்க, மத்திய அரசு உச்ச நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்துள்ளது. அயோத்தியில் சர்ச்சைக்குரிய இடம் யாருக்கு சொந்தம் என வழக்குகள் நிலுவையில் உள்ளன.1992 ம் ஆண்டு பாபர் மசூதி இடிப்பு வழக்கு விசாரனைக்கு வந்த போது மசூதியை சுற்றியுள்ள 67ஏக்கர் நிலமும் உச்ச நீதிமன்றத்தின் கட்டுப்பாட்டுக்குள் வந்தது. இருந்த போதும் புள்ளி 313 ஏக்கர் நிலம் தான் பிரச்சினைக்குரியதாக உள்ளது.

இவ்வழக்கில் விரைந்து தீர்ப்பு அளிக்க கோரிக்கை எழுந்துள்ள நிலையில் மத்திய அரசு புதிதாக மனு ஒன்றை தாக்கல் செய்துள்ளது. அதில் சர்ச்சைக்குரிய நிலத்தை தவிர்த்து மற்ற இடத்தை உடனடியாக விடுவிக்க கேட்டுக்கொண்டுள்ளது. விரைவில் நாடாளுமன்ற தேர்தல் நடைபெற உள்ள நிலையில் மத்திய அரசின் இந்த நடவடிக்கை அரசியல் ரீதியாக பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Exit mobile version