2020 ஆம் ஆண்டுக்கான நீட் தேர்வு அட்டவணை வெளியீடு

2020 ஆம் ஆண்டுக்கான நீட் தேர்வு அட்டவணை வெளியாகியுள்ளது.

2020ம் ஆண்டுக்கான நீட் தேர்வு மே 3 ஆம் தேதி நடைபெறும் என தேசிய தேர்வாணையம் அறிவித்துள்ளது. நீட் எழுதும் மாணவர்கள், வரும் டிசம்பர் 2ஆம் தேதி முதல், 31ஆம் தேதி வரை விண்ணப்பிக்கலாம் எனவும் தெரிவித்துள்ளது. மார்ச் 27 ஆம் தேதி தேர்வுக்கான அனுமதி சீட்டு வழங்கப்படும் என்றும், தேர்வு முடிவுகள் ஜூன் 4 ஆம் தேதி வெளியாகும் என்று தேசிய தேர்வாணையம் அறிவித்துள்ளது.

Exit mobile version