தர்பார் படத்தின் முதல் பாடல் ரிலீஸ் தேதி அறிவிப்பு

பேட்ட படத்தை தொடர்ந்து நடிகர் ரஜினிகாந்த் அடுத்ததாக இயக்குநர் ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் நடிக்கும் படம் ‘தர்பார்’. இதில் ரஜினிகாந்த் போலீஸ் அதிகாரியாக ஆதித்யா அருணாசலம் என்ற கதாப்பாத்திரத்தில் இருப்பது போன்ற மோஷன் போஸ்டர் சமீபத்தில் வெளியானது. இந்த படத்தில் ரஜினிக்கு ஜோடியாக நயன்தாரா நடிக்கிறார். அனிருத் இசையமைக்கும் இந்த படத்தினை லைகா நிறுவனம் தயாரிக்கிறது.

படத்தின் படப்பிடிப்பு பணிகள் முடிந்த நிலையில் போஸ்ட் புரொடக்‌ஷன் பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகின்றன. இந்நிலையில் இன்று படம் குறித்த முக்கிய அறிவிப்பு வெளியாகும் என்று நேற்றைய தினம் லைகா நிறுவனம் தனது ட்விட்டர் பக்கத்தில் அறிவிக்கப்பட்டது. அதன்படி தர்பார் படத்தின் முதல் பாடல் நவம்பர் 27-ம் தேதி ரிலீசாகும் என்று படக்குழு அறிவித்துள்ளது.

இதுகுறித்து இசையமைப்பாளர் அனிருத் பேசும் வீடியோ ஒன்று வெளியிடப்பட்டுள்ளது. அந்த வீடியோவில் ‘சும்மா கிழி’ என்று தொடங்கும் பாடலை பாடலாசிரியர் விவேக் எழுதி பாடகர் எஸ்.பி.பாலசுப்ரமணியம் பாடியிருப்பதாக தெரிவித்துள்ளார்.

Exit mobile version