"ஊழலுக்காக கலைக்கப்பட்ட ஆட்சி திமுக" – முதலமைச்சர்

ஊழலுக்காக கலைக்கப்பட்ட ஆட்சி திமுக என்றும், ஊழல் என்ற அக்மார்க் முத்திரை பொறிக்கப்பட்ட கட்சியும் திமுக தான் என்று முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி குற்றம்சாட்டியுள்ளார்.

மக்களவை தேர்தலையொட்டி, அதிமுக மற்றும் கூட்டணி கட்சி வேட்பாளர்களை ஆதரித்து முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி கடந்த 2 நாட்களாக சூறாவளி பிரசாரத்தில் ஈடுபட்டிருந்தார்.இதையடுத்து, 3ம் நாளான இன்று வேலூர் மாவட்டம் வள்ளலாரில் வேலூர் மக்களவை தொகுதி புதிய நீதி கட்சி வேட்பாளர் ஏ.சி.சண்முகத்தை ஆதரித்து முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி சூறாவளி பிரசாரம் மேற்கொண்டார். . அவருக்கு பொதுமக்கள் பூரண கும்ப மரியாதையுடன் உற்சாக வரவேற்பு அளித்தனர். தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்ட புதிய நீதி கட்சி வேட்பாளர் ஏ.சி.சண்முகம், முதலமைச்சர் சிறந்த ராஜதந்திரி என்று பாராட்டு தெரிவித்தார்.

தமிழகத்தின் பிரச்சனைகளை தீர்க்க அதிமுக தலைமையிலான கூட்டணியை வெற்றிபெற செய்யவேண்டும் என்று முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி வேண்டுகோள் விடுத்தார்.

தொடர்ந்து பேசிய முதலமைச்சர் பழனிசாமி, ஊழலுக்காக கலைக்கப்பட்ட ஆட்சி திமுக என்றும், ஊழல் என்ற அக்மார்க் முத்திரை பொறிக்கப்பட்ட கட்சியும் திமுக தான் எனவும் கூறினார்.

Exit mobile version