தொழுதூர் அணைக்கட்டில் நிறைவடையவுள்ள புனரமைக்கும் பணி

கடலூர் மாவட்டம் தொழுதூர் அணைக்கட்டில் புனரமைக்கும் பணி நிறைவடையவுள்ளதால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

கடலூர் மாவட்டம் வெள்ளாற்றின் குறுக்கே கட்டப்பட்டுள்ள தொழுதூர் அணைக்கட்டில் இருந்து வாய்க்கால் மூலம் தண்ணீர் கொண்டு வந்து சேமித்து வைத்து விவசாயத்திற்கு பயன்படுத்தப்பட்டு வருகிறது. இந்நிலையில் தொழுதூர் அணைக்கட்டு கட்டப்பட்டு நூறாண்டுகளுக்கு மேல் கடந்து விட்டதால் அதை புனரமைக்க விவசாயிகள் கோரிக்கை விடுத்தனர். இதையடுத்து, தமிழக அரசு நிதி ஒதுக்கீடு செய்து, சீரமைப்பு பணிகளை மேற்கொண்டு வருகிறது. இந்தப் பணிகள் முடிவடையும் நிலையில் உள்ளது. இதனால் மகிழ்ச்சியடைந்துள்ள அப்பகுதி விவசாயிகள், அரசுக்கு தங்களுடைய நன்றியை தெரிவித்து கொண்டனர்.

Exit mobile version