தமிழக அரசின் சூரிய ஒளி மின்சக்தி திட்டத்துக்கு வரவேற்பு

சூரிய ஒளி மின் சக்தி திட்டத்தின் கீழ், மல்லிகை சாகுபடி செய்துள்ள விவசாயிகள், தமிழக அரசுக்கு நன்றி தெரிவித்தனர். மதுரை மாவட்டம் திருப்பரங்குன்றம், நிலையூர், கைத்தறிநகர், குசவன்குண்டு, வலையங்குளம் உள்ளிட்ட சுற்றுப் பகுதிகளில் மல்லிகை பூ சாகுபடி அதிகமாக செய்யப்படுகிறது. மல்லிகைப்பூ சாகுபடிக்கு ஏராளமான சலுகை திட்டங்களை தமிழக அரசு அறிவித்துள்ளதால் ஆந்திரா, கர்நாடகா, கேரளா உள்ளிட்ட வெளிமாநிலங்களுக்கு மல்லிகை பெருமளவில் ஏற்றுமதி செய்யப்படுகிறது.

இதனிடையே குயவன்குண்டு கிராமத்தைச் சேர்ந்த, விவசாயி சேகர், தமிழக அரசின் சூரிய ஒளி மின்சக்தி திட்டத்தைப் பயன்படுத்தி கிணற்றுப் பாசனத்தில் சாகுபடி செய்த மல்லிகை பூ அமோக விளைச்சல் பெற்றுள்ளது. இதன் மூலம் நல்ல லாபம் கிடைப்பதாகவும், தமிழக அரசுக்கு நன்றியைத் தெரிவித்துக் கொள்வதாகவும் விவசாயி சேகர் கூறியுள்ளார்.

Exit mobile version