ஒரு நாட்டிற்கு ராணுவம் எந்த அளவிற்கு முக்கியமோ அந்த அளவிற்கு உளவு நிறுவனமும் முக்கியமானதாக கருதப்படுகிறது. அந்த வகையில் இந்தியாவின் முக்கிய உளவு அமைப்பான ரா தொடங்கபட்டு இன்றோடு 51 ஆண்டுகள் ஆகின்றது.
1966-ல் லால் பகதூர் சாஸ்திரியின் மறைவுக்குப் பிறகு பிரதமராகப் பொறுப்பேற்ற இந்திரா காந்தி, 1965 இந்தியா-பாகிஸ்தான் போரில் நுண்ணறிவுப் பிரிவுவான உளவு பிரிவுகளின் பங்களிப்பு குறைவாக இருப்பதாக நினைத்தார். அதன்காரணமாக 1968 செப்டம்பர் 21-ல் ‘ரா’ அமைப்பு தொடங்கபட்டது.
இந்திரா காந்தியின் தொலைநோக்கில் உருவான ‘ரா’,அமைப்பு வங்காளதேசப் போரில் முக்கியப் பங்கு வகித்தது. பாகிஸ்தானுக்கு எதிராக கிளர்ச்சியில் இறங்கிய வங்கதேசத்திற்கு இந்தியா ஆயுதமும் பயிற்சியும் அளித்தது மட்டுமல்லாமல், ‘காதேர் பாகினி’ என்ற ரகசியப் படையையும் வழிநடத்தி பாகிஸ்தானின் தகவல்தொடர்பை தூண்டித்தது. இதனால் பாகிஸ்தான் ராணுவம் நிலை தடுமாறியது. உள்ளூர் போராட்டகாரர்களுடன் இணைந்து முன்னேறிய இந்திய ராணுவம். ஒட்டுமொத்த கிழக்கு பாகிஸ்தானையும் தனது ஆளுகைக்குள் கொண்டுவந்து, வங்காளதேசம் என்ற புதிய நாடு பிறந்தது.
1970-களில், பாகிஸ்தான் அணுகுண்டு தொழில்நுட்பத்தை உருவாக்கிக் கொண்டிருப்பதை ‘ரா’ கண்டுபிடித்த விதம் சுவாரசியமானது. பாகிஸ்தானின் சலூன்களில் இருந்த ‘ரா’ ஏஜெண்டுகள் ரோமங்களைச் சேகரித்து அனுப்பினர். அவற்றைஆய்வுக்கு உட்படுத்தியபோது, அணு ஆயுதத்துக்குத் தேவையான வகையில் யுரேனியத்தைச் செறிவூட்டும் திறனை பாகிஸ்தான் அடைந்திருப்பது வெளிச்சத்திற்கு வந்தது
ஒருபக்கம்இந்தியா பாகிஸ்தான் சச்சரவு இருந்தாலும், நல்லெண்ண அடிப்படையில் சில தகவல்களைப் பரிமாறிக்கொள்வது உண்டு. அப்படி, பாகிஸ்தான் முன்னாள் அதிபர் பர்வேஷ் முஷாரப் மீது ஜெய்ஷ்-இ-முகமது அமைப்பு தாக்குதல் நடத்தப் போவதை அறிந்த ‘ரா’, அத்தகவலை பாகிஸ்தானுடன் பகிர்ந்துகொண்டது.
அதன் விளைவாக, பெரும் தாக்குதல் தடுக்கப்பட்டது. இந்த நிகழ்வை பாராட்டிய பாகிஸ்தான் ஐ.எஸ்.ஐ.யின் அந்நாளைய தலைவர் ஆசாத் துரானி, ‘ரா’ முன்னாள் தலைவர் ஏ.எஸ். துலாத்திடம் ஒருமுறை கூறினாராம்… ‘‘நீங்கள் எங்களைவிட உளவுப்பணியில் தேர்ந்தவர்கள் என்று கூறினாரம். இதன் மூலம் ரா’’ அமைப்பின் திறமை அறிந்து கொள்ள முடியும்.
ஆனாலும்‘ரா’ போன்ற அமைப்புக்கும் சறுக்கல்கள் ஏற்படுவது உண்டு 2008 மும்பை தாக்குதலை தடுக்கத் தவறியது, 1999 கார்கில் ஊடுருவலை எச்சரிக்கத் தவறியது என கூறபட்டாலும். இந்தியா போன்ற பெரும் நாடு, தன்னைச் சுற்றியிருக்கும் நாடுகளில் தமக்கு ஆதரவான சூழல் நிலவ வேண்டும் என்று எதிர்பார்ப்பது இயற்கையானதுதான். அதனைக சாத்தியப்படுத்த சப்தமில்லாமல் உழைத்து நாட்டை காக்கின்றது ரா” அமைப்பு.