திருவண்ணாமலை மாவட்டம் கொளக்குடி பகுதியில் அரியவகை பறவைகள் வரத்து அதிகரித்துள்ளதால் அப்பகுதி மக்கள் அதனை ஆர்வத்துடன் கண்டு செல்கின்றனர்.
தண்டராம்பட்டு மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் ஏராளமான ஏரிகள் உள்ளன. வரண்டு கிடந்த இந்த ஏரிகள் சாத்தனூர் அணையில் இருந்து பாசனத்திற்காக நீர் திறக்கப்பட்டதால் நிரம்பியுள்ளன. இந்த நிலையில், கொளக்குடி பகுதியில் உள்ள ஏரிகளுக்கு இறை தேடி ஏராளமான அரியவகை பறவைகள் வருகை தந்துள்ளன.
இதில் பெரிய மூக்கு நாரை, நீர்க்கோழி, தண்ணீர் தாரை, கொக்கு, கானாங்கோழி உள்ளிட்டவை அதிக அளவில் காணப்படுகிறது. இதனை அப்பகுதியில் உள்ள சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் ஆர்வத்துடன் கண்டு செல்கின்றனர்.