ரமலான் நோன்பு கஞ்சிக்கு அரிசி வழங்க எந்த சுணக்கமும் இருக்கக்கூடாது-முதன்மை செயலாளர்

ரமலான் நோன்பு கஞ்சிக்கு அரிசி வழங்குவதில் எந்த சுணக்கமும் இருக்கக்கூடாது என தமிழக அரசின் முதன்மை செயலாளர் அதிகாரிகளுக்கு அறிவுறுத்தியுள்ளார்.

அனைத்து மாவட்ட ஆட்சியர்கள், துணை ஆணையர்கள் மற்றும் உணவு பொருள் வழங்கல் துறைக்கு, தமிழக அரசின் முதன்மை செயலாளர் தயானந்த் கட்டாரியா, அறிக்கை ஒன்றை அனுப்பியுள்ளார். அதன்படி, 2019 ஆம் ஆண்டின் ரமலான் மாதத்தில் நோன்பு நோக்கும் இஸ்லாமிய மக்களுக்காக பள்ளி வாசல்களுக்கு தேவையான பச்சரிசியை எவ்வித இடர்பாடுகளோ, சுணக்கமோ இல்லாமல் வழங்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

Exit mobile version