பொருளாதாரத்தில் பின்தங்கிய உயர் வகுப்பினருக்கு 10 சதவீத இட ஒதுக்கீடு மசோதா மாநிலங்களவையில் இன்று தாக்கல் செய்யப்பட்டது. மாநிலங்களவை இன்று துவங்கிய நிலையில் தங்களிடம் ஆலோசனை நடத்தாமல், அவை நீட்டிக்கப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து எதிர்கட்சிகள் தொடர் முழக்கங்களை எழுப்பின.
இதையடுத்து பேசிய மத்திய அமைச்சர் அருண் ஜெட்லி, நாடாளுமன்றம் செயல்பட வேண்டும் என்பதே நாட்டு மக்களின் எதிர்பார்ப்பு என்று தெரிவித்தார். ஆனால் பல நாட்கள் நாடாளுமன்றம் ஒத்திவைக்கப்பட்டுள்ளது. இதனால் ஒருநாள் நீட்டிக்கப்பட்டது என்று தெரிவித்தார்.
இதனிடையே மாநிலங்களவையில் உயர் வகுப்பினருக்கான 10 சதவீத இடஒதுக்கீடு மசோதா தாக்கல் செய்யப்பட்டது. இதற்கு எதிர்கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்த நிலையில், அவை பிற்பகல் 2 மணி வரை ஒத்திவைக்கப்பட்டது.