மாநிலங்களவைக்கு போட்டியிடும் அதிமுக கூட்டணி வேட்பாளர்கள் முதலமைச்சர், துணை முதலமைச்சர் முன்னிலையில் இன்று வேட்பு மனு தாக்கல் செய்தனர். அதிமுக சார்பில் முகமது ஜான், சந்திர சேகரன், ஆகியோர் மாநிலங்களவைக்கு போடியிடுகின்றனர். இவர்கள் இருவரும் தலைமை செயலகத்தில், சட்ட பேரவை செயலாளர் சீனிவாசனிடம் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் ஆகியோர் முன்னிலையில் தங்களது வேட்பு மனுக்களை தாக்கல் செய்தனர்.
இதைத் தொடர்ந்து பாமக சார்பில் போட்டியிடும் அன்புமணி ராமதாசும் தனது வேட்புமனுவை தாக்கல் செய்தார். அப்போது முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் ஆகியோர் உடனிருந்தனர் தமிழகத்தில் 6 இடங்களுக்கான மாநிலங்களவை உறுப்பினர்களை தேர்வு செய்யும் தேர்தல் வரும் 18ம் தேதி நடைபெற உள்ளது. இதற்கான வேட்பு மனு தாக்கல் கடந்த 1ம் தேதி தொடங்கியது. வேட்பு மனுக்கள் மீது நாளை பரிசீலனை நடைபெறும். வேட்பு மனுக்களை திரும்ப பெற 11ம் தேதி கடைசி நாளாகும்.