போர் விமானங்கள் வாங்குவது அவசியமானது என்பதால் தான் ரபேல் ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டது – அமைச்சர் நிர்மலா சீதாராமன் 

ரபேல் போர் விமானங்களை ஹெச்.ஏ.எல் நிறுவனம் தான் உற்பத்தி செய்யும் என்று காங்கிரஸ் ஆட்சியின் போது ஒப்பந்தம் போடப்படவில்லை என பாதுகாப்புத்துறை அமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார்.

மக்களவையில் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி எழுப்பிய கேள்விகளுக்கு பதிலளித்து பேசிய அவர், விமானப்படைக்கு போர்விமானங்கள் வாங்குவது அவசியமானது என்பதால் தான் ரபேல் ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டதாக கூறினார். அதிகாரமளிக்கப்பட்ட குழு அனுமதி அளித்த பின்னரும் காங்கிரஸ் ஆட்சியில் ரபேல் விமானங்களை வாங்காதது ஏன்? என்று கேள்வி எழுப்பிய நிர்மலாசீதாராமன், 2016ஆம் ஆண்டு பிரான்சின் தஸ்ஸால்ட் நிறுவனத்துடன் மேற்கொள்ளப்பட்ட ஒப்பந்தத்தின்படி நடப்பாண்டில் முதல் ரபேல் விமானம் இந்தியா வரும் என்றார். நாட்டின் பாதுகாப்பு நலனைக் காட்டிலும் வணிகரீதியான ஒப்பந்தத்திற்கு காங்கிரஸ் முக்கியத்துவம் கொடுத்ததாக நிர்மலா சீதாராமன் குற்றம்சாட்டினார். எச்ஏஎல் நிறுவனம் தயாரிக்கும் விமானங்களுக்கு உத்தரவாதம் தர முடியாது என்பதால் தான் விமானப்படை வாங்கவில்லை என்று சுட்டிக் காட்டிய நிர்மலா சீதாராமன், தங்கள் ஆட்சியில் எந்தவித நடவடிக்கையும் எடுக்காத காங்கிரஸ் இன்று எச்.ஏ.எல்-லுக்காக முதலைக்கண்ணீர் வடிப்பதாக விமர்சித்தார்.

 

 

 

Exit mobile version