அறந்தாங்கி அருகே உள்ள ஆகாய மாரியம்மன் கோயில் சித்திரை திருவிழாவையொட்டி மாட்டு வண்டிப் பந்தயம் நடைபெற்றது.
புதுக்கோட்டை மாவட்டம் ஆளப்பிறந்தான் கிராமத்தில் உள்ள ஆகாய மாரியம்மன் கோயிலில் சித்ரா பொளர்ணமியை முன்னிட்டு மாட்டு வண்டிப் பந்தையம் நடைபெற்றது. ராமாநாதபும், தஞ்சை, திருச்சி, சிவகங்கை, தேனி உள்ளிட்ட மாவட்டங்களில் இருந்து 21 ஜோடி மாடுகள் கலந்து கொண்டன. இரண்டு பிரிவுகளாக நடைபெற்ற போட்டியில் முதல் மூன்று இடங்களை பிடித்த மாடு உரிமையாளர்களுக்கு 80 ஆயிரம் ரொக்கப்பணம் பரிசாக வழங்கப்பட்டது. மாடுகளை சிறப்பாக ஓட்டி வந்த சாரதிகளுக்கு சிறப்பு பரிசு மற்றும் கேடயங்கள் வழங்கப்பட்டது. பந்தயத்தை ஏராளமான ரசிகர்கள், பொதுமக்கள் சாலையின் இருபுறமும் திரண்டிருந்து கண்டு ரசித்தனர்.