காவிரி ஆற்றில் திறக்கப்படும் நீரின் அளவு ஒரு லட்சம் கனஅடியாக அதிகரிப்பு

கர்நாடக மாநிலம் காவிரி நீர்பிடிப்பு பகுதிகளில் தென்மேற்கு பருவமழை தீவிரமடைந்துள்ளது. இதனால் அங்குள்ள கிருஷ்ணராஜசாகர், கபினி உள்ளிட்ட அணைகள் நிரம்பி வருகின்றன. இதனால் அந்த அணைகளில் இருந்து உபரிநீர் முழுவதுமாக வெளியேற்றப்பட்டு வருகிறது. நேற்றிரவு 50 ஆயிரம் கனஅடி நீர் திறக்கப்பட்டது. இந்தநிலையில், தற்போது ஒரு லட்சம் கனஅடியாக தண்ணீர் திறக்கப்படுகிறது. இதனால் காவிரி கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இதனிடையே மேட்டூரில் அணையில் இருந்து டெல்டா பாசனத்திற்காக திறந்துவிடப்படும் நீரின் அளவு 25 ஆயிரம் கனஅடியாக அதிகரிக்கப்பட்டுள்ளது

Exit mobile version