கும்பமேளாவின் ஒருநிகழ்வான புஷ் பூர்ணிமா விழா கோலாகலம்

உத்தரப்பிரதேச மாநிலம் பிரயாக்ராஜ் நகரில் கும்பமேளாவின் ஒருநிகழ்வாக புஷ் பூர்ணிமா விழாவையொட்டி ஆயிரக்கணக்கான பக்தர்கள் கங்கை ஆற்றில் புனித நீராடினர்.உத்திரபிரதேசத்தில் 12 ஆண்டுகளுக்கு ஒருமுறை மகா கும்பமேளா திருவிழாவும், 6 ஆண்டுகளுக்கு ஒருமுறை கும்பமேளா திருவிழாவும் நடைபெற்றுவருகிறது. இந்தாண்டு கும்பமேளா திருவிழா பிரயாக்ராஜ் நகரில் தொடங்கி நடைபெற்றுவருகிறது. 50 நாட்கள் நடைபெறும் இந்தத் திருவிழா, மார்ச் 4ஆம் தேதி வரை நடைபெறவுள்ளது. கும்பமேளாவின் ஒருநிகழ்வாக புஷ் பூர்ணிமா விழாவையொட்டி, கங்கை நதிக்கரையில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் புனித நீராடி சென்றனர். 

Exit mobile version