நிவாரண நிதி வழங்கியதாக வந்த குறுஞ்செய்தியால் அதிர்ந்த பொதுமக்கள்

சேலம் தாசநாயக்கன்பட்டி மாரியம்மன் கோவில் அருகே இயங்கி வரும் ரேஷன் கடையில் 500க்கும் மேற்பட்ட குடும்ப அட்டைதாரர்களுக்கு கொரோனா நிவாரண நிதி வழங்கப்பட்டு வருகிறது. இந்நிலையில், இந்த ரேஷன் கடையில் குடும்ப அட்டைதாரராக உள்ள சீனிவாசன் என்பவருக்கு, கொரோனா நிவாரண நிதியான 2 ஆயிரம் ரூபாய் வழங்காமலேயே நிதி வழங்கியதாக அவரது செல்போனுக்கு ஒரு குறுஞ்செய்தி வந்துள்ளது. கொரோனா நிவாரணத் தொகை பெறாமலேயே குறுஞ்செய்தி வந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்த சீனிவாசன், இதுகுறித்து நியாயவிலை கடை ஊழியர் சொக்கலிங்கத்திடம் கேட்டதற்கு முறையாக பதில் கூறாமல் அவதூறாக பேசியதாக கூறப்படுகிறது.

இதையடுத்து, கடையின் முன்பு திரண்ட பொது மக்கள், ரேஷன் கடை ஊழியரை முற்றுகையிட்டு பணம் வழங்காமல் குறுஞ்செய்தி வந்தது குறித்து சரமாரியாக கேள்வி எழுப்பியதால் பரபரப்பு நிலவியது.

 

Exit mobile version