பொதுமக்கள் அத்தியாவசிய தேவைக்கு மட்டும் இ-பாஸ் பயன்படுத்த வேண்டும்- முதல்வர் பழனிசாமி!

பொதுமக்கள் அத்தியாவசிய தேவைக்கு மட்டும் இ-பாஸ் பயன்படுத்த வேண்டும் என்று முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி கேட்டுக் கொண்டுள்ளார்.

வேலூர், திருப்பத்தூர், ராணிப்பேட்டை மாவட்டங்களில், கொரோனா தடுப்பு பணிகள் குறித்து முதலமைச்சர் ஆய்வு மேற்கொண்டார். மாவட்டங்களில் மேற்கொள்ளப்படும் வளர்ச்சி திட்டப் பணிகள் குறித்து அதிகாரிகளிடம் முதலமைச்சர் கேட்டறிந்தார். ஆய்வுக் கூட்டத்தில் அமைச்சர்கள் கே.சி.வீரமணி, நிலோபர் கபீல், 3 மாவட்ட ஆட்சியர்கள் கலந்து கொண்டனர். அப்போது பேசிய முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, பொதுமக்களின் கோரிக்கையை ஏற்று இ-பாஸ் நடைமுறை எளிமைப்படுத்தப் பட்டுள்ளதாகவும், அவசியம் என்றால் மட்டுமே மக்கள் இ-பாஸ் பயன்படுத்த வேண்டும் எனவும் கேட்டுக்கொண்டார். காய்ச்சல் முகாம் நடத்தப்பட்டதன் மூலம், கொரோனா பரவல் பிற மாநிலங்களை விட இங்கு கட்டுப்படுத்தப்பட்டுள்ளதாகவும் முதலமைச்சர் தெரிவித்தார்.

Exit mobile version