தமிழக அரசால் போதிய விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டதால், பிளாஸ்டிக் பயன்பாடு குறைந்துள்ளதாக உள்ளாட்சித்துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி தெரிவித்துள்ளார்.
கோவையில் நடைபெற்ற பிளாஸ்டிக் விழிப்புணர்வு நிகழ்ச்சியில் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி கலந்து கொண்டு பேசினார். அப்போது, பிளஸ்டிக் பயன்பாடு அதிகரித்தால், குடிநீர் மாசடைந்து வாழமுடியாத நிலை ஏற்படும் என்று கூறினார். இதற்காக தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி பல்வேறு கட்டங்களாக ஆலோசனை மேற்கொண்டு நடவடிக்கை எடுத்து வருவதாக கூறிய அவர், இதற்கு பொதுமக்கள் ஒத்துழைப்பு தரவேண்டும் என கேட்டுக்கொண்டார். பிளாஸ்டிக் பயன்பாட்டால் மனிதர்கள் வாழ்வது கேள்விக்குறியாகி உள்ளதாகவும், நிறுவனங்கள் விதிமுறைகளுக்கு உட்பட்டு தயாரிக்க முன் வந்தால் அரசு ஏற்றுக்கொள்ளும் என அமைச்சர் எஸ்.பி.வேலுமணி தெரிவித்தார்.