குடிநீர் தட்டுப்பாட்டை போக்க போதிய நடவடிக்கை எடுத்துள்ளநிலையில், பொதுமக்கள் தண்ணீரை சிக்கனமாக பயன்படுத்த வேண்டும் என, திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் மகேஸ்வரி ரவிக்குமார் கேட்டுக்கொண்டுள்ளார்.
திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் செய்தியாளர்களை சந்தித்த அவர், கடந்த ஆண்டை விட இந்த ஆண்டு 45 சதவீதம் மழை பொழிவு குறைந்துள்ளது எனவும், இதனால் குடிநீர் தட்டுப்பாடு ஏற்படும் சூழல் உருவாகியுள்ளது எனவும் கூறினார். அதை எதிர்கொள்ளும் வகையில், மாவட்டம் முழுவதும் தக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக குறிப்பிட்ட ஆட்சியர் மகேஸ்வரி ரவிக்குமார், பொதுமக்கள் தண்ணீரை சிக்கனமாக பயன்படுத்த வேண்டும் என அறிவுறுத்தியுள்ளார்.