சென்னையில் பல்வேறு இடங்களில் காய்கறிகள் கிடைக்காமல் பொதுமக்கள் கடும் அவதி

சென்னை மாநகரில் குறைந்த அளவிலேயே நடமாடும் வாகனங்கள் மூலம் காய்கறிகள் விற்பனை செய்யப்படுவதால் பொதுமக்களுக்கு காய்கறிகள் கிடைப்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.

முழு ஊரடங்கை முன்னிட்டு சென்னையில் 5 ஆயிரம் தள்ளு வண்டிகள், 1 டன் எடையுள்ள 2 ஆயிரம் வாகனங்கள் மூலம் சென்னையில் அனைத்து மண்டலங்களிலும் காய்கறி மற்றும் பழங்கள் விற்பனை செய்யப்படும் என மாநகராட்சி அறிவித்திருந்தது.

ஆனால் இதுவரை ஆயிரத்து 236 வாகனங்களுக்கு மட்டுமே அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

அம்பத்தூர் மண்டலத்தில் 10 நடமாடும் வாகனங்களுக்கும், சோழிங்கநல்லூர் மண்டலத்தில் 11 வாகனங்களுக்கு மட்டும் அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

இதனால் காய்கறிகள் கிடைக்காமல் பொதுமக்கள் அவதிப்பட்டு வருகின்றனர்.

Exit mobile version