தடுப்பூசி தட்டுப்பாடு ஏற்படும் வாய்ப்பு இருப்பதால் பொதுமக்கள் அதிர்ச்சி

தமிழ்நாட்டில் தற்போது ஒரு நாளுக்கு தேவையான கொரோனா தடுப்பூசி மட்டுமே கையிருப்பில் உள்ளதாக தகவல்கள் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளன.

தமிழ்நாட்டில் 45 வயதுக்கும் மேற்பட்டவர்களுக்காக, ஜூன் 1ம் தேதி நிலவரப்படி, மத்திய அரசு தொகுப்பிலிருந்து 4 புள்ளி 95 லட்சம் டோஸ் தடுப்பூசிகள் ஒதுக்கீடு செய்யப்பட்டன. இதில், மீதமுள்ள கையிருப்பும் சேர்த்து 2 தினங்களுக்கு முன்னர் 6 புள்ளி 50 லட்சம் தடுப்பூசிகள் கையிருப்பில் இருந்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில், ஜூன் 1ம் தேதி நிலவரப்படி 18 வயது மேற்பட்டவர்கள் முதல் அனைத்து வயதுப் பிரிவினரும் சேர்த்து, 98 ஆயிரத்து183 பேருக்கு தடுப்பு ஊசி செலுத்தப்பட்டன. மேலும், ஜூன் 2ம் தேதியில் தினசரி தடுப்பூசி செலுத்தியவர்கள் எண்ணிக்கை, 54 ஆயிரத்து 870 ஆக குறைந்த நிலையில், தற்போது தடுப்பூசி செலுத்தியவர்கள் எண்ணிக்கை மீண்டும் அதிகரித்துள்ளது. இதன் மூலம் ஜூன் மாத நிலவரப்படி கடந்த 3 நாட்களில், தடுப்பூசி செலுத்தியவர்கள் எண்ணிக்கை 4 புள்ளி 42 லட்சமாக பதிவாகியுள்ளது. தற்போது 2 லட்சத்திற்கும் குறைவான டோஸ் தடுப்பூசிகள் மட்டுமே கையிருப்பு உள்ளதால், தடுப்பூசி கையிருப்பு பூஜ்ஜியம் என்ற நிலையை எட்ட வாய்ப்பிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

Exit mobile version