காரைக்காலில் முன்னறிவிப்பின்றி வாய்க்கால் பாலத்தை உடைத்ததால் பொதுமக்கள் சிரமம்

புதுச்சேரி மாவட்டம் காரைக்காலில் முன்னறிவிப்பின்றி வாய்க்கால் பாலத்தை உடைத்ததால் பொதுமக்கள் சிரமத்திற்குள்ளாகினர்.

காரைக்காலை அடுத்த கோட்டுச்சேரி பகுதியில் உள்ள நாட்டார் வாய்க்கால் பாலத்தை சீர்செய்ய வேண்டுமென பொது மக்கள் கோரிக்கை வைத்திருந்தனர். இந்நிலையில் அதனை சரி செய்வதாக கூறி எந்தவித முன்னறிவிப்பும் இன்றியும், போக்குவரத்து மாற்றம் செய்யாமலும் நாட்டார் வாய்க்கால் பாலம் பொதுப்பணி துறை சார்பில் உடைக்கப்பட்டது.

இதனால் பள்ளிக்கு செல்லும் மாணவர்கள், பணிக்கு செல்வோர் சாலையை பயன்படுத்த முடியாமல் 15 கிலோ மீட்டர் சுற்றி செல்ல வேண்டிய நிலை ஏற்பட்டது. மேலும் சட்டமன்ற உறுப்பினருக்கே தெரியாமல் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டிருப்பது தொகுதி மக்களிடையே அரசின் மீது கடும் கோபத்தை ஏற்படுத்தியுள்ளது.இதனையடுத்து அதிகாரிகள் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டுமென பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.

Exit mobile version