சென்னையில் திடீரென பெய்த மழையால் பொதுமக்கள் மகிழ்ச்சி

சென்னையில் இன்று மாலை பல்வேறு பகுதிகளில் திடீரென பெய்த மழையால் பொதுமக்கள் மகிழ்ச்சியடைந்தனர். சென்னையில் நுங்கம்பாக்கம், அரும்பாக்கம், அயப்பாக்கம், சூளைமேடு, அமைந்தகரை, விருகம்பாக்கம், சாலிகிராமம் உள்ளிட்ட பகுதிகளில் இன்று மாலை பரவலாக மழை பெய்தது. இதனால் வாகன ஓட்டிகள் மழையில் நனைந்தபடி சென்றனர். தொடர்ந்து பெய்த மழையால் சாலைகளில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடியதால், வாகன ஓட்டிகள் அவதிக்குள்ளாகினர்.

காலையில் மிதமான வெயில் இருந்த நிலையில், திடீரென பெய்த மழையால் பொதுமக்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர். இதேபோன்று, சென்னை நகரின் புறநகர் பகுதிகளிலும் பரவலாக மழை பெய்தது.

Exit mobile version