திண்டுக்கல் மாவட்டம் பழனியில், உழவர் சந்தை அருகே அமர்ந்துள்ள வியாபாரிகள், அதிக விலைக்கு காய்கறிகளை விற்பனை செய்வதாக பொதுமக்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.
பழனி பகுதியைச் சேர்ந்த பொதுமக்களுக்கு தேவையான காய்கறிகள், குறைவான விலையில் கிடைக்க வசதியாக, உழவர்சந்தை செயல்பட்டு வருகிறது.
கொரோனா காரணமாக உழவர்சந்தை மூடப்பட்டுள்ள நிலையில், உழவர்சந்தை வாயிலில் திடீர் கடைகள் அமைத்துள்ள வியாபாரிகள் காய்கறிகளை கூடுதல் விலைக்கு விற்பனை செய்து வருவதாக பொதுமக்கள் புகார் தெரிவித்துள்னர்.
வேளாண்துறை சார்பில் விவசாயிகளுக்கு வழங்கிய அடையாள அட்டையை அணிந்தபடி வியாபாரம் செய்வதாகவும் அவர்கள் குறை கூறியுள்ளனர்.