கோவை மாவட்டம் வால்பாறையில், ஆற்று நீர் வீடுகளுக்குள் புகுந்துள்ளதால் பொதுமக்கள் கடும் அவதிக்கு உள்ளாகியுள்ளனர்.
கோவை மாவட்டம் வால்பாறை பகுதியில், தென் மேற்கு பருவ மழையின் காரணமாக கன மழை பெய்து வருகிறது. இதனால் இன்று பள்ளி கல்லூரிக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் தொடர் கன மழையால் வால்பாறை பகுதியில் உள்ள ஆறுகளில் வெல்ல பெருக்கு ஏற்பட்டு, ஆறுகளில் இருந்து குடியிருப்பு பகுதிகளுக்குள் தண்ணீர் புகுந்துள்ளது. இதில் 100க்கும் மேற்பட்ட வீடுகளில் தண்ணீர் புகுந்து பாதிப்புக்கு உள்ளாகியுள்ளது. இதனால், அப்பகுதிகளில் வசிக்கும் பொது மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு மாற்றப்படுகின்றனர்.