திருவண்ணாமலை மாவட்டம் கீழ்பென்னாத்தூர் அருகே உள்ள குப்பை கிடங்கை அகற்ற பேரூராட்சி நிர்வாகத்திற்கு பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்
கீழ்பென்னாத்தூரை அடுத்த வேட்டவலம் கிராமத்தில் பேரூராட்சி சார்பில் குப்பை கிடங்கு அமைக்கப்பட்டுள்ளது. இப்பகுதியில் கொட்டப்படும் குப்பைகள் அடிக்கடி எரிக்கப்படுவதால் புகை மூட்டம் ஏற்படுகிறது. இதனால், மூச்சுத் திணறல் மற்றும் தொண்டை எரிச்சல் ஏற்படுவதாக தெரிவிக்கும் அப்பகுதி மக்கள் குப்பை கிடங்கை அகற்ற வேண்டும் என்று பேரூராட்சி நிர்வாகத்திற்கு கோரிக்கை வைத்துள்ளனர்.