கிருஷ்ணகிரி அருகே சுமார் ஆயிரத்து 200 ஆண்டுகள் பழமையான நினைவு மண்டபத்தை புனரமைக்க வேண்டும் என தொல்லியல் துறைக்கு பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
கிருஷ்ணகிரியை தலைமை இடமாகக்கொண்டு ஆண்டு வந்த மன்னர்களின் ஒருவரான ஹொய்சாள மன்னர், சுமார் ஆயிரத்து 200 ஆண்டுகளுக்கு முன்பு சின்னக்கொத்தூர் மலை அடிவாரத்தில் மணி மண்டபத்துடன் கூடிய சிவன் கோவிலை கட்டினார். கம்பிரமாக எழுந்து நின்ற மணிமண்டபம் மற்றும் சிவன் கோவில், காலப்போக்கில் போதிய பராமாரிப்பு இன்றி புதையுண்ட நிலையில் காணப்படுகிறது. சமூக விரோதிகளின் கூடாரமாக இருக்கும் இவ்விடத்தை, தொல்பொருள் ஆராய்ச்சியாளர்களின் கவனத்திற்கு கொண்டு சென்று பழமையான நினைவுச் சின்னமாக பாதுகாத்திட முன்வர வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.