திருவண்ணாமலை மாவட்டம் கீழ்பென்னாத்தூரில் ஏரி மற்றும் சாலையோரங்களில் இறைச்சி கழிவுகள் கொட்டப்படுவதை தடுக்க பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்
இறைச்சி மற்றும் பிளாஸ்டிக் கழிவுகள் கொட்டப்படுவதால் துர்நாற்றம் வீசுவதுடன், நோய்கள் பரவவும் வாய்ப்பு உள்ளது. ஏரியின் பள்ளமான பகுதிகள் மற்றும் நீர் வரும் பாதைகளில் குப்பைகள் கொட்டப்படுவதால் மழை காலங்களில் நீரைத் தேக்கி வைக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. ஏரிக்கு நீர்வரும் பாதைகளிலும் அடைப்பு ஏற்பட்டுள்ளது. எனவே மாவட்ட நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுத்து ஏரியை சுத்தம் செய்யவும், கழிவுகள் கொட்டப்படுவதைத் தடுக்கவும் வேண்டும் என்று அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.