பள்ளிக் குழந்தைகளை வாக்கு சேகரிக்க அழைத்துச் சென்ற திமுக வேட்பாளருக்கு பொதுமக்கள் கண்டனம்

பள்ளிக் குழந்தைகளை வாக்கு சேகரிக்க அழைத்துச் சென்ற திமுக வேட்பாளருக்கு பொதுமக்கள் கண்டனம் தெரிவித்துள்ளனர். திருவண்ணாமலை மாவட்டம் கீழ்பென்னாத்தூர்
பகுதியில் திருவண்ணாமலை மக்களவை திமுக வேட்பாளர் அண்ணாதுரையை ஆதரித்து பிரசாரம் நடைபெற்றது.அப்போது தேர்தல் வீதிகளை மீறி குழந்தைகள் மற்றும் பள்ளி மாணவர்களை அழைத்து வந்து வாக்கு சேகரித்தனர்.

இச்செயலுக்கு பொதுமக்கள் கடும் கண்டனம் தெரிவித்தனர். சுட்டெரிக்கும் வெயிலுக்கு மத்தியில் சிறுவர்களை வலுக்கட்டாயமாக பிரசாரத்திற்கு அழைத்து வந்திருந்தது முகச்சுளிப்பை ஏற்படுத்தியது.

Exit mobile version