திரைப்படத்தில் வரும் கிணத்தை காணோம் என்பதை போன்று, ஸ்ரீமுஷ்ணம் அருகே குளத்தை காணவில்லை என்று பொதுமக்கள் புகார் அளித்துள்ளனர்.
கடலூர் மாவட்டம் ஸ்ரீமுஷ்ணம் அருகே நெடுஞ்சேரி பகுதியில் சம்பேரி என்ற பல ஏக்கர் பரப்பளவு கொண்ட குளம் இருந்துள்ளது. குளத்தை சுமார் 20க்கும் மேற்பட்ட நபர்கள் வயல்களாக மாற்றி ஆக்கிரமிப்பு செய்துள்ளதாக பொதுமக்கள் புகார் கூறியுள்ளனர். மேலும் ஏரியை தகர்க்கும் விதமாக JCB இயந்திரத்தை கொண்டு வயல்வெளியாக மாற்றும் பணி நடைபெற்றதாக கூறப்படுகிறது. இதனால், அப்பகுதி பொதுமக்கள் பணியை நிறுத்த JCBயை சிறைபிடித்ததால் பரபரப்பு நிலவியது. தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த காவல் துறையினர் பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தியதையடுத்து, பொதுமக்கள் கலைந்து சென்றனர். இந்நிலையில், மாவட்ட நிர்வாகம் தலையிட்டு குளத்தை மீட்டு தர வேண்டும் என்று அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
Discussion about this post