பினாமி ஒழிப்பு சட்டத்தின்கீழ் 6 ஆயிரத்து 900 கோடி ரூபாய் மதிப்பிலான சொத்துகள் முடக்கப்பட்டு உள்ளதாக வருமான வரித்துறை அறிவித்துள்ளது. இது தொடர்பாக வருமானவரித்துறை வெயிட்டுள்ள அறிவிப்பில், பினாமி பரிமாற்றங்கள், பினாமிக்கள் மற்றும் பலன் பெறுவோர் ஆகிய செயல்களில் ஈடுபடும் பொதுமக்கள் விசாரணைக்கு உட்படுத்தப்படுவர் என தெரிவித்துள்ளது. குற்றம் நிரூபிக்கப்பட்டால் அவர்களுக்கு 7 வருடங்கள் சிறை தண்டனையும் விதிக்க நேரிடும் என்பதோடு பினாமி சொத்தின் சந்தை மதிப்பில் 25 சதவீதம் அபராதமும் செலுத்த வேண்டும் என்றும் கூறியுள்ளது.
அதிகாரிகளுக்கு தவறான தகவல்களை அளிப்போர் மீது பினாமி சொத்து பரிமாற்றங்கள் தடை சட்டம், 2016 சட்டத்தின் கீழ் விசாரணைக்கு உட்படுத்தப்படுவதுடன், 5 வருடம் சிறை தண்டனையும் விதிக்கப்படும் என்றும், அவர்கள் பினாமி சொத்தின் சந்தை மதிப்பில் 10 சதவீத அபராத தொகையும் செலுத்த நேரிடும் என்றும் தெரிவித்து உள்ளது.
இதுவரை 6 ஆயிரத்து 900 கோடி ரூபாய் மதிப்பிலான பினாமி சொத்துக்கள் முடக்கப்பட்டுள்ளதாகவும் வருமானவரித்துறை தெரிவித்துள்ளது.