60 ஆயிரம் கோடி ரூபாய் மதிப்பில் காவிரி நதியையும், கோதாவரி நதியையும் இணைக்கும் திட்டம் விரைவில் அமல்படுத்தப்படும் என மத்திய கப்பல் மற்றும் நீர்வளத்துறை அமைச்சர் நிதின் கட்கரி தெரிவித்துள்ளார்.
ஆந்திரா மாநிலத்தின் அமராவதியில் பாஜக தொண்டர்களிடையே மத்திய அமைச்சர் நிதின் கட்கரி உரையாற்றினர். அப்போது பேசிய அவர், ஆண்டுதோறும் கோதாவரி நதியிலிருந்து வீணாகும் ஆயிரத்து 100 டி.எம்.சி நீரை இரும்பு குழாய்கள் மூலம் தமிழகத்தில் உள்ள காவிரியில் இணைக்க முடிவு செய்துள்ளதாக தெரிவித்தார். குறிப்பாக, கோதாவரி, கிருஷ்ணா, பெண்ணார் மற்றும் காவிரி நதிகளை இணைப்பதற்கான விரிவான திட்ட அறிக்கை தயாராக உள்ளது என்று சுட்டிக் காட்டிய நிதின்கட்கரி, மத்திய அமைச்சரவையின் ஒப்புதலுக்குப்பின், 60 ஆயிரம் கோடி ரூபாய் உலக வங்கியில் நிதியுதவி பெற்று, இந்த திட்டம் விரைவில் அமல்படுத்தப்படும் என கூறினார்.