மதுரையில் சித்திரைத் திருவிழாவிற்காக தேர் செப்பனிடுதல் பணி துவக்கம்

ஏப்ரல் 18ஆம் தேதி நடைபெறக்கூடிய சித்திரைத் திருவிழாவிற்காக தேர் செப்பனிடுதல் பணி துவக்கம் உள்ளது. மக்களவை தேர்தல் பணிகள் ஒருபுறம் நடைபெற்று வரும்நிலையில், மதுரையில் சித்திரை திருவிழாவிற்கான ஏற்பாடுகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. மீனாட்சி திருக்கல்யாணம் அதனைத் தொடர்ந்து தேரோட்டம் அதற்கு அடுத்தபடியாக புகழ்பெற்ற வைகை ஆற்றில் கள்ளழகர் எழுந்தருளம் வைபவம் என விழாக்கள் நடைபெற உள்ளன.

கடந்த 7ஆம் தேதி கொடி ஏற்றத்துடன் துவங்கிய சித்திரைத் திருவிழாவின் முக்கிய நிகழ்வான தேரோட்டம் 18ஆம் தேதி நடைபெறுகிறது. இதற்காக தேரை செப்பனிடும் பணிகள் தொடங்கி உள்ளன. எந்தவித இடர்பாடுகள் இன்றி இலகுவாக தேர் செல்வதற்கு இந்த வருடம் கூடுதலாக இரண்டு சக்கரங்கள் மையப்பகுதியிலேயே பொருத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த பணிக்காக கிட்டத்தட்ட 20 பணியாளர்கள் ஒரு மாதத்திற்கும் மேலாக இந்த பணியில் ஈடுபடுத்தப்பட உள்ளனர்.

Exit mobile version