குடியரசு தினம் மற்றும் பிரதமரின் மதுரையை வருகையையொட்டி, உலகப் புகழ் பெற்ற மதுரை மீனாட்சியம்மன் கோயிலில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
பக்தர்கள் பலத்த சோதனைக்கு பின்னரே கோயில் வளாகத்திற்குள் அனுமதிக்கப்படுகின்றனர். மேலும் பக்தர்கள் கோயிலை சுற்றியுள்ள வீதிகளில் கூடிப் பேசவும் பொருட்கள் எடுத்து செல்லவும் அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. தற்போதுள்ள பாதுகாப்பை அதிகப்படுத்தி காவல்துறையினர் தீவிர சோதனையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.