ரஷ்ய சுற்றுப் பயணத்தை முடித்துக் கொண்டு பிரதமர் மோடி நாடு திரும்பினார்.
2 நாட்கள் அரசு முறை பயணமாக பிரதமர் நரேந்திர மோடி ரஷ்யா சென்றிருந்தார். இந்த சுற்றுப் பயணத்தில் இந்தியா- ரஷ்யா இடையேயான 20வது உச்சி மாநாட்டில் பிரதமர் மோடி பங்கேற்றார்.
இதனையடுத்து ரஷ்ய அதிபர் புதினை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தினார். பல்வேறு துறைகள் சார்ந்த ஒத்துழைப்பு குறித்து பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது. இதில் இருநாடுகளுக்கு இடையே 50 முக்கிய ஒப்பந்தங்கள் கையெழுத்தாகின.
இதில் ஜப்பான் நாட்டு பிரதமர், ஷின்சோ அபே, மங்கோலிய அதிபர், மலேசிய அதிபர், உள்ளிட்ட தலைவர்களையும் சந்தித்தார். இந்தநிலையில் ரஷ்யாவில் பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்ற பிரதமர் மோடி, தனது சுற்றுப்பயணத்தை முடித்து கொண்டு அதிகாலை நாடு திரும்பினார்.