இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நேதன்யாகு மீது இருந்த ஊழல் வழக்குகள் காரணமாக அவர் தனது பதவியை ராஜினாமா செய்யும் சூழல் உருவாகியுள்ளது.
இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நேதன்யாகு மீது 3 ஊழல் வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது. சுமார் 2 லட்சத்து 64 ஆயிரம் டாலர் மதிப்புள்ள வெகுமதிகளைப் பெற்றுக் கொண்டதாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது. அவர் மீதான 3 வழக்குகளிலும் குற்றங்கள் நிரூபிக்கப்பட்டால் 10 வருடகாலம் சிறைத் தண்டனை கிடைக்கலாம் என கூறப்படுகிறது. இந்த ஆண்டில் தொடர்ச்சியாக இரண்டு தேர்தல்கள் நடைபெற்ற நிலையில், குழப்பமான அரசியல் சூழலில் நேதன்யாகு கைது செய்யப்பட்டால் அடுத்து நாட்டை யார் ஆள்வது என்ற கேள்வி எழுந்துள்ளது.