தேசிய சினிமா அருங்காட்சியகத்தை பிரதமர் இன்று திறந்து வைக்கிறார்

மும்பையில் கட்டப்பட்டுள்ள இந்திய தேசிய சினிமா அருங்காட்சியகத்தை பிரதமர் நரேந்திர மோடி இன்று திறந்து வைக்கிறார். மும்பையில் 140 கோடியே 61லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள இந்திய தேசிய சினிமா அருங்காட்சியகத்தை பிரதமர் மோடி இன்று திறந்து வைக்கிறார். மகாராஷ்டிரா மாநிலம் மும்பையில் உள்ள 19ம் நூற்றாண்டு அரண்மனையான குல்ஷன் மஹாலில் இந்திய தேசிய சினிமா அருங்காட்சியகம் அமைக்கப்பட்டுள்ளது.

இதில் இந்திய சினிமா வரலாற்று புகைப்படங்கள், வீடியோக்கள் உள்ளீட்டவை அருங்காட்சியகத்தில் வைக்கப்பட்டுள்ளன. இந்நிலையில் அருங்காட்சியகத்தை பிரதமர் நரேந்திர மோடி இன்று திறந்து வைக்கிறார். விழாவில் பாலிவுட் நடிகர்கள் அமிதாப் பச்சன், அக்ஷய குமார் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொள்கிறானர்.

Exit mobile version