பிரதமர் மோடி மீதுள்ள அச்சம் காரணமாக எதிர்க்கட்சிகள் சந்தர்ப்பவாத கூட்டணி அமைத்து வருவதாக, தமிழக பாஜக தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் குற்றம்சாட்டி உள்ளார்.
திருமலையில் சுவாமி தரிசனம் செய்த அவர் பின்னர் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். நாடாளுமன்ற தேர்தல் கூட்டணி பற்றி அமித் ஷா முடிவு செய்வார் என்றார். பிரதமர் மோடியை பார்த்து எதிர்க்கட்சிகள் அச்சம் அடைந்து இருப்பதாக கருத்து தெரிவித்த தமிழிசை, எனவே, அவை சந்தர்ப்பவாத கூட்டணி அமைத்து வருவதாக விமர்சித்தார்.
தமிழகத்தில் நடைபெற உள்ள இடைத்தேர்தல் குறித்து 15-ம் தேதி ஆலோசிக்கப்படும் என்று கூறிய அவர், ஆந்திர முதலமைச்சர் சந்திரபாபு நாயுடு மக்களை ஏமாற்றி வருவதாக கண்டனம் தெரிவித்தார்.