நிதி ஆயோக் கூட்டத்தில் பங்கேற்க வருமாறு அனைத்து மாநில முதல்வர்களுக்கும் பிரதமர் மோடி அழைப்பு விடுத்துள்ளார். பிரதமராக மோடி மீண்டும் பிரதமராக பெறுப்பேற்றதை அடுத்து, நிதி ஆயோக் கூட்டம் வரும் 15ம் தேதி டெல்லியில் நடைபெற உள்ளது. பிரதமர் தலைமையில் நடைபெறும் இந்தக் கூட்டத்தில் மத்திய அமைச்சர்கள், மாநில முதலமைச்சர்கள் பங்கேற்க உள்ளனர்.
இந்தநிலையில், நிதி ஆயோக் கூட்டத்தில் அனைத்து மாநில முதல்வர்களும் கலந்து கொள்ள வேண்டும் என்று பிரதமர் மோடி அழைப்பு விடுத்துள்ளார். நிதி ஆயோக் கூட்டத்திற்கு பிறகு முதல்வர்களுக்கு பிரதமர் மோடி இரவு விருந்து அளிக்க உள்ளார்.