வெளிநாடுவாழ் இந்தியர்கள் தின மாநாட்டை பிரதமர் தொடங்கி வைத்தார்

உத்தரப் பிரதேசத்தில் 15வது வெளிநாடுவாழ் இந்தியர்கள் தின மாநாட்டை பிரதமர் மோடி தொடங்கி வைத்தார். வாரணாசியில் புதிய இந்தியாவை உருவாக்குவதில் வெளிநாடுவாழ் இந்தியர்களின் பங்கு என்ற தலைப்பில் மாநாடு நடைபெறுகிறது. 85 நாடுகளில் இருந்து 4 ஆயிரத்திற்கும் மேற்பட்ட வெளிநாடு வாழ் இந்தியர்கள் இந்த மாநாட்டில் பங்கேற்கின்றனர். இந்த மாநாட்டை பிரதமர் மோடி தொடங்கி வைத்தார். இந்த நிகழ்ச்சியில் தலைமை விருந்தினராக இந்திய வம்சாவளியைச் சேர்ந்த மோரீஷஸ் பிரதமர் பிரவீண் ஜகந்நாத் பங்கேற்றார்.

பிரதமர் மோடியை சந்திக்கும் அவர், இரு தரப்பு உறவு உள்பட பல்வேறு விஷயங்கள் குறித்துப் பேச உள்ளார். 3 நாட்கள் நடைபெறும் இந்த மாநாடு பிரதமர் மோடியின் தொகுதியான வாராணசியில் நடைபெறுவதால் கூடுதல் முக்கியத்துவம் பெற்றுள்ளது. மாநாட்டின் நிறைவு நிகழ்ச்சியில் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் உரையாற்றவுள்ளார். இதில் முதலாவதாக உரையாற்றிய சுஸ்மா சிவராஜ், உத்தரபிரதேசத்தில் நடைபெற்று வரும் கும்பமேளா நிகழ்ச்சியின் சிறப்புகள் குறித்து தெரிவித்தார்.

Exit mobile version