மூன்று மாதங்களாக தக்காளி விலை ஏற்றத்தில் உள்ளதாக கிருஷ்ணகிரி மாவட்டம் ஒசூர் சுற்று வட்டார பகுதிகளை சேர்ந்த விவசாயிகள் மகிழ்ச்சி தெரிவித்துள்ளனர்.
ஒசூர் பகுதிகளில் விளையும் தக்காளி, கேரட், பீன்ஸ் உள்ளிட்ட காய்கறிகள் தமிழகம் மட்டுமின்றி, ஆந்திரா, கர்நாடகா உள்ளிட்ட மாநிலங்களுக்கும் அனுப்பப்படுகின்றன. கடந்த மூன்று மாதங்களாக தக்காளி விலை ஏற்றத்தில் உள்ளதால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
ஒசூர் அருகே பத்தளப்பள்ளி காய்கறி சந்தையில் தற்போது 20 கிலோ தக்காளி கூடை 700 ரூபாய் முதல் 800 ரூபாய் வரை விலைபோகிறது. இதேபோல பெங்களூரு தக்காளி 20 கிலோ கூடை, 550 ரூபாய் முதல் 700 ரூபாய் வரை விற்கப்படுகிறது. கோடை வெயில் அதிகரிப்பு, கோடை மழையால் வரத்து குறைந்ததும் விலையேற்றத்திற்கான காரணங்களாக கூறப்படுகிறது.