கடந்த சில தினங்களாக உச்சத்தில் இருந்த வெங்காயத்தின் விலை, இன்று 10 ரூபாய் குறைந்து 35 ரூபாய்க்கு விற்பனையாகிறது.
வட மாநிலங்களில் கடந்த சில மாதங்களாக கொட்டித் தீர்த்த கனமழையால், வெங்காயத்தின் விளைச்சல் பாதிக்கப்பட்டது. அதனால் தமிழகத்தில் வெங்காய வரத்து குறைந்ததால், அதன் விலை 70 ரூபாயை தாண்டியது. வெங்காயத்தின் விலை சில தினங்களில் குறையும் என்றும், அப்படி இல்லையென்றால் அரசே வெங்காயத்தை கொள்முதல் செய்து, மக்களுக்கு குறைந்த விலையில் விற்பனை செய்யும் என்றும் தமிழக அரசு தெரிவித்தது.
இந்த நிலையில், வெங்காயத்தின் விலை இன்று 10 ரூபாய் குறைந்து 35 ரூபாய் முதல், சில்லறை வியபாரிகளிடம் அதிகபட்சமாக 55 ரூபாய் வரையிலும் விற்பனையாகிறது. இதனால் மக்கள் நிம்மதியடைந்துள்ளனர். ஆந்திரா மற்றும் மகாராஷ்டிராவில் இருந்து வெங்காயத்தின் வரத்து அதிகரித்துள்ளதால், மேலும் விலை குறையும் என்று கூறப்படுகிறது.