கடந்த சில மாதங்களுக்கு முன் உச்சத்தில் இருந்த வெங்காயத்தின் விலை தற்போது 10 ரூபாயில் இருந்து 30 ரூபாய் ஆக குறைந்துள்ளது.
கடந்த சில மாதங்களுக்கு முன் தமிழகம் முழுவதும் வெங்காய பற்றாக்குறை ஏற்பட்டு, அதன் விலையும் உச்சத்தில் இருந்தது. அதன் தாக்கம் கோவை மாவட்டம், மேட்டுப்பாளையம் எம்.ஜி.ஆர் மார்க்கெட்டிலும் எதிரொலித்தது.
1 கிலோ வெங்காயம் 100 ரூபாய் முதல் 150 ரூபாய் வரை விற்கப்பட்டது. இதனையடுத்து, வெங்காயத்தின் விலையை குறைக்க வேண்டுமென்ற மக்களின் கோரிக்கையை ஏற்று தமிழக அரசு பல்வேறு நடவடிக்கைகளை மெற்கொண்டது. வெளிநாடுகளில் இருந்தும், வெளி மாநிலங்களில் இருந்தும் வெங்காயம் இறக்குமதி செய்யப்பட்டது.
இதனையடுத்து வெங்காயத்தின் விலை 10 ரூபாயில் இருந்து 30 ரூபாய் வரை குறைந்துள்ளது. வெங்காயத்தின் விலை குறைவு மக்களுக்கு மகிழ்ச்சி அளிப்பதாகவும், மேலும், மக்களின் சிரமத்தை போக்கிய தமிழக முதலமைச்சருக்கு வியாபாரிகள் நன்றி தெரிவித்தனர்.