சென்னையில் இன்றைய ஆபரணத் தங்கத்தின் விலை நிலவரம்

சென்னையில் தங்கத்தின் விலை, சவரனுக்கு 208 ரூபாய் குறைந்து, 27 ஆயிரத்து 736 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. நேற்று 24 காரட் தங்கத்தின் விலை சவரனுக்கு 27 ஆயிரத்து 994 ரூபாயாக இருந்த நிலையில், 208 ரூபாய் குறைந்து, தற்போது 27 ஆயிரத்து 736 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. 24 கேரட் தங்கம் கிராம் ஒன்றுக்கு 3 ஆயிரத்து 493 ரூபாயில் இருந்து 26 ரூபாய் குறைந்து 3 ஆயிரத்துக்கு 467 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. அதேபோல், 22 கேரட் தங்கத்தின் விலை சவரனுக்கு 26 ஆயிரத்து 688 ரூபாயில் இருந்து, 208 ரூபாய் குறைந்து, 26 ஆயிரத்து 480 ரூபாய்க்கும், 22 கேரட் தங்கம் கிராம் ஒன்றுக்கு 3 ஆயிரத்து 336 ரூபாயில் இருந்து 26 ரூபாய் குறைந்து, 3 ஆயிரத்து 310 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

அதேபோல வெள்ளியின் விலை கிராம் ஒன்றுக்கு 44 ரூபாய் 80 காசுகளாக இருந்த நிலையில், ஒரு ரூபாய் 10 காசுகள் குறைந்து தற்போது 43 ரூபாய் 70 காசுகளாக விற்பனை செய்யப்படுகிறது. ஒரு கிலோ வெள்ளியின் விலை 44 ஆயிரத்து 800 ரூபாயிலிருந்து ஆயிரத்து 100 ரூபாய் குறைந்து 43 ஆயிரத்து 700 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது.

Exit mobile version