ரூபாய் 27 ஆயிரத்தை நெருங்கும் ஆபரணத் தங்கத்தின் விலை

சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை, சவரனுக்கு 27 ஆயிரத்தை நெருங்கி வருகிறது.

ஆபரணத் தங்கத்தின் விலை இன்று கிராமுக்கு 62 ரூபாய் உயர்ந்து 3 ஆயிரத்து 372 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. சவரனுக்கு 496 ரூபாய் உயர்ந்து, 26 ஆயிரத்து 976-க்கு விற்பனையாகிறது.

24 கேரட் தங்கத்தின் விலை கிராமுக்கு 62 ரூபாய் உயர்ந்து, 3 ஆயிரத்து 529 ரூபாய்க்கும், சவரன் 28 ஆயிரத்து 232 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. வெள்ளி கிராமுக்கு 60 காசுகள் அதிகரித்து 44 ரூபாய் 30 காசுகளுக்கும், கிலோ வெள்ளி 44 ஆயிரத்து 300 ரூபாய்க்கும் விற்பனையாகிறது.

Exit mobile version